தலவத்துகொட தீ விபத்தில் மூவர் உயிரிழப்பு!

Date:

தலவத்துகொட சந்தி அருகில் அமைந்துள்ள உணவகமொன்றில் இன்று (09) காலை இடம்பெற்ற தீ விபத்தில் காயமடைந்த மூவரும் உயிரிழந்துள்ளனர்.

தீ விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீப்பரவலைகட்டுக்குள் கொண்டுவர ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டை மாநகர சபையிலிருந்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

முதற்கட்ட விசாரணையில், எரிவாயு கசிவின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது, எனினும், சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. தலங்கம பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணை தொடங்கியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலஞ்சம் கோரினால் 1954 துரித இலக்கத்திற்கு அழையுங்கள்

திடீர் மரண விசாரணை பரிசோதகர்கள் தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கான இலஞ்சம் அல்லது...

இந்தோனேசிய ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களை சமர்ப்பித்தார் இலங்கை தூதுவர் சஷிகலா பிரேமவர்தன!

இந்தோனேசியாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சஷிகலா பிரேமவர்தன (Sashikala Premawardhane), தனது...

சரண குணவர்தனவுக்கு கடூழிய சிறைத்தண்டனை!

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு...

நாட்டின் பல பகுதிகளில் 30 – 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று

இன்று (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...