டெங்கு ஒழிப்பு வாரத்தின் நான்காம் நாள் இன்றாகும். இன்றைய தினம் அனைத்து பொது இடங்களை சுத்தப்படுத்தும் பணி இடம்பெறவுள்ளது.
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோய் பரவும் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஒத்துழைப்புடன் இந்த விசேட டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவரை காணப்பட்ட உயர் அபாயமிக்க 74 டெங்கு வலயம் தற்போது 84ஆக உயர்வடைந்துள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி. மாத்தறை, ஹம்பாந்தோட்டை , குருநாகல் , புத்தளம், இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை, மட்டக்களப்பு மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோய் தீவிரமாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
