வடஇந்திய மாநிலங்களில் மஸ்ஜித்களின் தொடர் உடைப்புக்கு எதிராக திரளும் பெரும்பான்மை இந்துக்கள்.

Date:

Azeez Luthfullah.

வட இந்தியாவில் தொடர்ந்து பள்ளிவாசல்கள் குறிவைக்கப்படும் பதற்றமான சூழ்நிலையில், பார்மர் நகரில் மதங்களைக் கடந்து சகோதர சமுதாய மக்கள் இணைந்து நடத்திய அமைதிப் பேரணி, இந்தியாவின் உண்மையான சமூக நல்லிணக்கத்தை மீட்டுருவாக்கம் செய்துள்ளது குறித்து எழுத்தாளர் அஸீஸ் லுத்புல்லாஹ் விவரிக்கிறார்.

கடந்த சில நாட்களாகவே வட இந்தியாவிலிருந்து குறிப்பாக இராஜஸ்தானிலிருந்து வருகின்ற செய்திகள் அனைத்தும் வேதனையளிப்பதாகவே இருந்து வந்தன.

ஊடகங்களில் வெளியான செய்திகளோ வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியதைப் போன்று இருந்தன.
இது பள்ளிவாசல்களை இடிக்கின்ற சீஸனோ என்பதைப் போன்று தொடர்ந்து வெவ்வேறு இடங்களில் 1000 ஆண்டு தொன்மையான பள்ளிவாசல்கள் முதல் 300 ஆண்டுகள், 400 ஆண்டுக்கால பள்ளிவாசல்கள் வரை குறி வைக்கப்பட்டன.

சில பள்ளிவாசல்கள் ஷஹீதாக்கப்பட்டன (இடிக்கப்பட்டன). நான்கு மாவட்டங்களில் 350 பள்ளிவாசல்கள் ஆபத்துக்குள்ளாகி நிற்கின்றன.

11 ஆம் தேதி நோட்டீஸ் பிறப்பித்து 16ஆம் தேதி இரவு அதனைப் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்குக் கொடுத்து 17ஆம் தேதி பகலில் பள்ளிவாசல் இடிக்கப்பட்ட அவலமும் நடந்திருக்கின்றது.

இந்த நிலையில் காயமுற்ற நெஞ்சங்களுக்கு ஒத்தடம் அளிக்கின்ற வகையில் பார்மர் நகரத்திலிருந்து அந்த இனிய செய்தி வந்துள்ளது.

அங்கு நான்கு பள்ளிவாசல்கள் குறி வைக்கப்பட, அந்தக் கொடுமையை அனுமதிக்க மாட்டோம் என்று சகோதர சமுதாயச் சொந்தங்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டு அமைதிப் பேரணி நடத்தி எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றார்கள். இன்று DM-இடம் மனுவையும் தந்திருக்கின்றார்கள்.

கான் மியான் கானியானி, ஆஜாத் சிங் ரத்தோர் ஆகிய இரண்டு நண்பர்கள் இந்த அற்புதத்தை நிகழ்த்தியிருக்கின்றார்கள்.

இதுதான் இந்தியா. இதுதான் சமூக நல்லிணக்கம்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் 72வது வருடாந்த அங்கத்தவர் மாநாடு நாளை கண்டியில் ..!

கடந்த 72 வருடகாலமாக இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் இஸ்லாமியப் பணியில் உழைத்துவரும்...

ஆன்மீகம் மற்றும் லௌகீக முன்னேற்றங்களுக்கு வழிகாட்டும் ஆஷூரா தின சிந்தனைகள்

அகீல் பின் ஸாலிம் அல்-ஷம்மரி (அரபு மூலம்) நன்றி- அல்-முஸ்லிம் இணையதளம் (குறிப்பு: இன்றைய...

சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்திய ஐக்கிய மக்கள் சக்தி!

ஹொரணை தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்பினர் மற்றும் அவர்...

இலங்கையில் பௌத்த மதத்தைப் பாதுகாக்க அவசர சீர்திருத்தங்கள் தேவை: முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா வலியுறுத்தல்!

இலங்கையில் பௌத்த மகா சங்கத்தினர் (துறவிகள்) சம்பந்தப்பட்ட தொடர்ச்சியான முறைகேடு குற்றச்சாட்டுகள்,...