தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) விலகுவதாக கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வெற்றி பெற்ற நிலையில் தேர்தலுக்குப் பின், தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்துள்ளது.

ஐயுஎம்எல் பாபநாசம் எம்எல்ஏ ஷாஜகான், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார். அதேபோல சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழுவில், வாணியம்பாடி எம்எல்ஏவும் சட்டப்பேரவைக் கட்சித் தலைவருமான எஸ்.எஸ்.பி. சையத் பாரூக் பாஷா இடம்பெற்றார்.

இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெற்ற கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி திமுக கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(ஐயுஎம்எல்) விலகுவதாக கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் அறிவித்துள்ளார்.

தவெக அரசில் அங்கம் வகிப்பதால் திமுக கூட்டணியில் பயணிக்க முடியாது என்றும் மு.க. ஸ்டாலினுடன் ஆலோசித்துதான் முடிவெடுத்ததாகவும், தற்போது தவெக நல்லாட்சி தொடர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

1967 ஆம் ஆண்டு முதல் திமுக கூட்டணியில் மாறாமல் இணைந்து தேர்தலை சந்தித்து வந்த இந்திய யூனியன் முஸ்லீம் லீக், சுமார் 60 ஆண்டுகளுக்கு பின் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளது.
முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் திமுக கூட்டணியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.