அஸ்வெசும விபரங்களை புதுப்பிக்கும் பணிகள் தீவிரம்!

Date:

கடந்த 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ‘அஸ்வெசும’ (Aswesuma) நலன்புரித் திட்டத்துடன் தொடர்புடைய பயனாளிகளின் விபரங்களை புதுப்பிக்கும் செயல்முறை தற்போது நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நலன்புரி நன்மைகள் சபையின் உதவி ஆணையாளர்  தெரிவித்துள்ளார்.

இரண்டாம் கட்ட அஸ்வெசும கொடுப்பனவு விநியோகம் தொடர்பாக இன்று (24) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைச் குறிப்பிட்டுள்ளார்.

கட்ட வாரியான கொடுப்பனவு விபரங்கள் 2023ஆம் ஆண்டின் முதற்கட்டத்தின் கீழ் Transitional, Vulnerable, Poor மற்றும் Extremely Poor ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் சுமார் 16 இலட்சம் பேருக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், 2025 ஏப்ரல் மாதத்தில் இடைநிலைப் பிரிவைச் சேர்ந்த 315,000 பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளும், ஆபத்துக்குள்ளாகக்கூடிய பிரிவைச் சேர்ந்த 425,000 பயனாளிகளுக்கான கொடுப்பனவுகளும் இந்த ஆண்டு (2026) ஜூன் மாதத்துடன் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

எனினும், இந்த இரண்டு பிரிவுகளையும் சேர்ந்த குடும்பங்களில் ஏதேனும் ஒரு குடும்பம் தற்போது ஏழை அல்லது அத்தியந்த ஏழை நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தால், விபரங்களை இற்றைப்படுத்தும் செயல்முறையின் அடிப்படையில் அவர்கள் மீண்டும் அஸ்வெசும நன்மைகளைப் பெறுவதற்குத் தகுதி பெறலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆயுட்கால கொடுப்பனவு அல்ல இடைநிலை மற்றும் ஆபத்துக்குள்ளாகக்கூடிய பிரிவினருக்கு இதுவரை இரண்டு வருடங்களுக்கு முன்பு பெறப்பட்ட விபரங்களின் அடிப்படையிலேயே கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வந்துள்ளன. தற்போது அக்குடும்பங்களின் சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்பதால், புதிய விபரங்களை ஆராய்ந்து தகுதியுடையவர்களை மீண்டும் இத்திட்டத்தில் இணைத்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தற்போது சம்பந்தப்பட்ட தரப்பினர் விபரங்களை இற்றைப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருவதுடன், கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு புதிய விபரங்களை வழங்கும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன. அந்த விபரங்களின் அடிப்படையில் பெறப்படும் புள்ளிகளுக்கு அமைய, மீண்டும் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் இணைய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப பயனாளிகளின் நிலை மாறக்கூடும் என்பதால், அஸ்வெசும என்பது எந்தவொரு நபருக்கும் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும் ஒரு சலுகை அல்ல என்று உதவி ஆணையாளர் வலியுறுத்தினார்.

உண்மையிலேயே இந்த உதவி தேவைப்படும் எவரும் விடுபடாத வகையில், தகுதியுடைய அனைவருக்கும் அஸ்வெசும திட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

டெங்கு காய்ச்சலினால் ருஹுனு பல்கலை மாணவி உயிரிழப்பு!

ருஹுனு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இது பல்கலைக்கழக...

கோட்டபாய ராஜபக்ஷ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு !

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போது, தம்மை...

36-ஆவது நேட்டோ உச்சிமாநாட்டை நடத்தத் தயாராகும் அங்காரா: உலகத் தலைவர்களை வரவேற்கிறது துருக்கி!

துருக்கி  தலைநகர் அங்காராவில் ஜூலை 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில்...