மலேசியாவில் நடைபெற்ற முதலாவது IFMA முஆய் தாய் (Muay Thai) பாடசாலை உலக சாம்பியன்ஷிப் 2026 போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்களை வென்று தாயகம் திரும்பிய மூன்று வீரர்களுக்கும் அவர்களது பிரதான பயிற்சியாளருக்கும் கஹட்டோவிட்ட பகுதியில் மிகப்பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்வு நடத்தப்பட்டது.
கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயம், கிராமத்து இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த வரவேற்பு நிகழ்வும் வாகனப் பேரணியும் மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இவ்வீரர்களை பேண்ட் வாத்திய முழக்கங்களுடன் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், ஊர் மக்கள் மற்றும் கஹடோவிட்ட 369 கிராம உத்தியோகத்தர் பிரதீப், கஹடோவிட்ட 369/A கிராம உத்தியோகத்தர் சுஜானி ஆகியோரும் கலந்துகொண்டு வாழ்த்தியதுடன் பரிசில்களையும் வழங்கினர்.
இதன்போது, தங்கப் பதக்கம் வென்ற இரு வீரர்களுக்கும், வெண்கலப் பதக்கம் வென்ற வீரருக்கும் மற்றும் பிரதான பயிற்சியாளர் முஆத் இப்திகார் அவர்களுக்கும் நினைவுச் சின்னங்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
வெற்றி வீரர்கள் M. K. சதாத் காமில் – தங்கப் பதக்கம்
-
M. N. நுவைர் நௌஷாத் – தங்கப் பதக்கம்
-
M. I. மிஷாரி இல்ஹாம் – வெண்கலப் பதக்கம்
சர்வதேச அளவில் தங்களது திறமையை நிரூபித்து வரலாறு படைத்த இந்த இளம் வீரர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!

