அதிகரிக்கும் டெங்கு பரவல்: நாடு முழுவதும் 76, 000-ஐ கடந்த பாதிப்புகள்

Date:

நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 76,000 ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன் 53 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவு நேற்று (19) இரவு விடுத்துள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் ஆண்டின் இதுவரையில் 15,910 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்ததாக கொழும்பு மாவட்டத்தில் 15,110 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதுதவிர ஏனைய மாவட்டங்களான மாத்தறையில் 5330 பேரும், கண்டியில் 5111 பேரும், களுத்துறையில் 5010 பேரும் இரத்தினபுரியில் 4295 பேரும், காலியில் 4260 பேரும் டெங்கு நோயினால் அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளனர்.

2026 ஆம் ஆண்டில் ஜூலை மாதத்தின் முதல் 19 நாட்களில் மாத்திரம் 20,666 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

குவைத்திற்கான சேவையை இடைநிறுத்திய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக, குவைத்திற்கான விமான...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும்...

அவர்களுக்கு ரொட்டியையும் பொழுதுபோக்கு அம்சங்களையும் கொடுங்கள்: உலகக் கோப்பை குறித்த ஓர் அழகிய சிந்தனை

-நூஹ் மஹ்ழரி (தமிழ்நாடு) உலகக் கோப்பை கால்பந்தாட்ட காய்ச்சல் உலகம் முழுவதும் பற்றி...

பாலின மாற்று சுற்றறிக்கைக்கு எதிரான அடிப்படை உரிமை மனுவை நிராகரித்தது உயர் நீதிமன்றம்!

பெண்களும் ஆண்களும் தங்கள் பாலினத்தை மாற்றிக்கொள்ள அனுமதிக்கும் சுற்றறிக்கைகளைச் செல்லாததாக்கக் கோரித்...