ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்தபோது உண்ணாவிரதத்தைத் தொடங்கியிருந்த அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தமது சட்ட ஆலோசகரின் அறிவுரையின் பேரில் உண்ணாவிரதத்தைக் கைவிட முடிவு செய்துள்ளார்.
உண்ணாவிரதத்தைத் தொடங்கிய அவர், தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
