நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

Date:

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மொனராகலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களில் மாலை 2.00 மணிக்குக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும்.

மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமேல், வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்வது குறித்து அரசின் தீவிர ஆலோசனை!

எல்-நினோ நிலைமையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட...

முஸ்லிம்கள் மிகுந்த ஆர்வத்துடன் அவதானித்து வரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணகள்

-லத்தீப் பாரூக் 21/04/2019 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு படுகொலைகளின் இதுவரை விசாரிக்கப்படாத...

டெங்கு பரவல் அதிகரிப்பு: லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனை பெற்றோருக்கு அவசர அறிவிப்பு!

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் (LRH) டெங்கு காய்ச்சல் காரணமாக...

நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவியாக திருமதி அனீஸ்

நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் என். ஆர். அனீஸ் ஜனாதிபதி...