பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை

Date:

இன்றையதினம் (24) நாட்டின் மேல், வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வரண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும், அம்பாந்தோட்டை,  புத்தளம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்திலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொணராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் பகல் வேளைகளில் வெப்ப குறிகாட்டி (மனித உடல் உணரும் வெப்ப அளவு) ‘அவதானம் செலுத்தும் மட்டத்தில்’ காணப்படுமென திணணக்களம் அறிவித்துள்ளது.

எனவே உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று நிலை காரணமாக, நாட்டின் வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை, திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, அம்பாந்தோட்டை, திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

புனித மக்கா மாநகரில் இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் மகளின் திருமண ஒப்பந்தம் (நிக்காஹ்)!!

சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் ஓமர் லெப்பே அமீர் அஜ்வத் அவர்களின்...

அமைச்சர் ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 116 மேலதிக வாக்குகளால் தோல்வி!

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவிற்கு எதிராக...

நாட்டின் முதலாவது சர்வதேச மும்மொழி இலக்கிய விழா கொழும்பில் ஆரம்பம்

இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் புகழ்பெற்ற எழுத்தாளருமான சஷி தரூர் கொழும்பில் ஆரம்பமாகியுள்ள...