மல்வத்து மகாநாயக்க தேரரைச் சந்தித்த தென்கொரிய சமாதான அமைப்பின் சர்வமத தலைவர்கள்.

Date:

தென்கொரியாவின் சர்வதேச மதநல்லிணக்கக் குழுவின் பிரதிநிதிகளும், தர்ம சக்தி அமைப்பின் பிரதிநிதிகளும் இணைந்து கண்டி மல்வத்து மகா விகாரைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டனர்.

 இன்று மல்வத்து பீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஶ்ரீ சுமங்கல தேரரை அவர்கள் நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.

சர்வதேச ரீதியில் பௌத்த மத விழுமியங்களைப் பாதுகாப்பது, உலகளாவிய ஆன்மீக ஒருமைப்பாடு மற்றும் மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்துவது குறித்து இச்சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது.

இலங்கை மற்றும் தென்கொரியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான ஆன்மீக மற்றும் கலாசார ரீதியிலான பிணைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாகவும் இரு தரப்பினரும் தமது கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

மத சுதந்திரம் மற்றும் உலக அமைதியை மையமாகக் கொண்டு செயல்படும் இக்குழுவினரின் இந்த கண்டி விஜயம், இரு நாட்டு பௌத்த சமூகங்களுக்கு இடையிலான உறவில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

Popular

More like this
Related

திட்வா புயல் காரணமாக சேதமடைந்த 14 பாலங்களை புனரமைக்க அமைச்சரவை அனுமதி

திட்வா புயல் காரணமாக சேதமடைந்த 14 பாலங்களை புனரமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி...

அமெரிக்காவின் பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலிலிருந்து சிரியா நீக்கம்: அகமது அல்-ஷரா வரவேற்பு

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கான அமெரிக்காவின் பட்டியலிலிருந்து சிரியா அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டிருப்பதைச் சிரிய...

தண்ணீர் என்று நினைத்து ஹைட்ரஜன் பெராக்சைடைக் குடித்த சிறுமி உயிரிழப்பு!

கம்பளையின் புபுரஸ்ஸ டெல்டாவத்த பகுதியில், மூன்று வயது சிறுமி ஒருவர், தண்ணீர்...

42வது மீலாதுன் நபி தேசிய விழாவை முன்னிட்டு நீர்கொழும்பில் நடைபெற்ற “Welcome to Our Mosque” நிகழ்ச்சித்திட்டம்

42ஆவது தேசிய மீலாதுன் நபி விழாவை முன்னிட்டு, கம்பஹா மாவட்டம் நீர்கொழும்பை...