2026 ஆம் ஆண்டிற்கான 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 9 ம் திகதி

Date:

2026 ஆம் ஆண்டிற்கான 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் உள்ள 2,723 பரீட்சை மையங்களில் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

முதல் வினாத்தாள் காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை, இரண்டாம் வினாத்தாள் காலை 11.15 மணி முதல் பிற்பகல் 12.15 மணி வரை

விண்ணப்பதாரர்களின் வருகைப் பதிவேடுகள் பாடசாலைகள் மூலம் அந்தந்த வலயக் கல்வி அலுவலகங்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

விண்ணப்பங்களில் ஏதேனும் திருத்தங்களைச் செய்ய வேண்டியிருப்பின், பெற்றோர் மற்றும் பாடசாலைகளுக்கு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 3 ஆம் திகதி வரை இணையவழியில் (Online) திருத்தங்களை மேற்கொள்வதற்கான வசதி அளிக்கப்பட்டுள்ளது.

பின்வரும் உத்தியோகபூர்வ இணையதளங்கள் வாயிலாக இத்திருத்தங்களைச் செய்யலாம் www.doenets.lk (“Our Services” → “Exam Information Centre” பகுதி மூலம்) www.onlineexam.gov.lk மேலதிக தகவல்களுக்கு தொலைபேசி இலக்கங்கள்: 011-2784208, 011-2784537, 011-2786616, 011-2785413, அவசர உதவி இலக்கம் (Hotline): 1911 இலக்கங்களைத் தொடர்பு கொள்ள முடியும்.

Popular

More like this
Related

அடுத்து வரும் 36 மணித்தியாலங்களுக்கு மழை நீடிக்கும் வாய்ப்பு!

அடுத்து வரும் 36 மணித்தியாலங்களில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி,...

பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாக்கும் வரைவுச் சட்டமூலம்’ உழைக்கும் மக்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்கே – முன்னிலை சோசலிசக் கட்சி சாடல்!

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ளபயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் Protection of the State...

வேளாண் தொழில் நுட்பம் மற்றும் நிலையான உணவு உற்பத்தியில் இலங்கை – கட்டார் கூட்டுறவு விரிவாக்கம்

வேளாண் தொழில்நுட்பம் (Agri-technology), காலநிலைக்கேற்ற விவசாயம் மற்றும் நிலையான உணவு உற்பத்தி...

சவூதி மன்னரிடம் அனோஜனுக்கு அரச மன்னிப்பு வழங்குமாறு இலங்கை முஸ்லிம் எம்.பிக்கள் கூட்டு வேண்டுகோள்.

சவூதி அரேபியாவில் சிறைத்தண்டனையையும் அபராதத்தையும் எதிர்கொண்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜன் என்பவருக்கு...