அவர்களுக்கு ரொட்டியையும் பொழுதுபோக்கு அம்சங்களையும் கொடுங்கள்: உலகக் கோப்பை குறித்த ஓர் அழகிய சிந்தனை

Date:

-நூஹ் மஹ்ழரி (தமிழ்நாடு)

உலகக் கோப்பை கால்பந்தாட்ட காய்ச்சல் உலகம் முழுவதும் பற்றி எரிந்தது. இரவெல்லாம் கண்விழித்து அந்தப் போட்டிகளைக் காணும் அளவுக்கு மக்கள் வெறிபிடித்து அலைந்தார்கள்.

இந்தப் படத்தைப் பாருங்கள். இது, கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் ஒரே காட்சியில் ஒன்றிணைத்து வழங்குகிறது.

இடப்பக்கம் (கடந்த காலம்): இது, மறையும் சூரியனின் இதமான ஒளியில், பண்டைய ரோமானிய மாடங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

அங்கே, ரோமாவின் பாரம்பரிய அங்கி அணிந்த பெருங்கூட்டம், வாள்வீரர்களின் சண்டையைக் காண உற்சாகத்துடன் கைகளை உயர்த்தி ஆரவாரம் செய்கிறது.

வலப்பக்கம் (நிகழ்காலம்): இது, இரவில் சுடர்விடும் மின்விளக்குகளின் கீழ், ஒரு நவீன கால்பந்து மைதானத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது.

அங்கே, ரசிகர்கள் தங்கள் முன்னோர்களைப் போலவே அதே தீவிரத்துடன் கைக்குட்டைகளை உயர்த்தி ஆரவாரம் செய்கிறார்கள்.

“அவர்களுக்கு ரொட்டியையும் பொழுதுபோக்கு அம்சங்களையும் கொடுங்கள். அப்போது அவர்கள் ஒருபோதும் கலகம் செய்ய மாட்டார்கள்”

இது, ரோமானிய நையாண்டி எழுத்தாளர் ஜூவனல் கூறிய புகழ்பெற்ற லத்தீன் கூற்று.

பண்டைய ரோம் மக்கள், அதிகாரிகளால் வழங்கப்பட்ட இலவச ரொட்டி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக (சர்க்கஸ், கிளாடியேட்டர் போட்டிகள்) தங்கள் அரசியல் உரிமைகளையும், அநீதியை எதிர்ப்பதில் தங்களின் பங்கையும் எவ்வாறு கைவிட்டனர் என்பதை ஜூவனல் விமர்சித்தார்.

இத்தகைய காட்சிகள் இன்றும் அப்படியே நடந்தேறுகிறது. கோலங்கள் மாறியிருக்கலாம். ஆனால் மக்கள் தங்களை அறியாமலேயே ஏமாற்றப்படுகிறார்கள்.

வாழ்கால சமூகத்திலும் மக்கள் தங்களின் உண்மையான கவலைகளிலிருந்து விலகி கோழைகளாக முடங்கிக் கிடக்க, விளையாட்டுப் போட்டிகளும் திரைப்படங்களும் திணிக்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

எல்-நினோ தாக்கத்தை எதிர்கொள்வது குறித்து அரசின் தீவிர ஆலோசனை!

எல்-நினோ நிலைமையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட...

முஸ்லிம்கள் மிகுந்த ஆர்வத்துடன் அவதானித்து வரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணகள்

-லத்தீப் பாரூக் 21/04/2019 அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு படுகொலைகளின் இதுவரை விசாரிக்கப்படாத...

டெங்கு பரவல் அதிகரிப்பு: லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனை பெற்றோருக்கு அவசர அறிவிப்பு!

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் (LRH) டெங்கு காய்ச்சல் காரணமாக...

நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவியாக திருமதி அனீஸ்

நிதி ஆணைக்குழுவின் புதிய தலைவராகவும் உறுப்பினராகவும் என். ஆர். அனீஸ் ஜனாதிபதி...