ஈரானுக்கான புதிய இலங்கைத் தூதுவராக பேராசிரியர் பஸீஹா அஸ்மி பொறுப்பேற்பு

Date:

ஈரான் இஸ்லாமியக் குடியரசுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் பஸீஹா அஸ்மி  கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.
தெஹ்ரானில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்தில் நேற்று (30)  தனது பணிகளை ஆரம்பித்தார்.

இராஜதந்திரப் பணிக்கு முன்னர், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிய அவர், புவியியல் துறையில் முதலாம் வகுப்புச் சித்தியுடன் இளநிலைப் பட்டத்தையும், நோர்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (NTNU) M.Phil மற்றும் PhD பட்டங்களையும் பெற்றுள்ளார்.

20 ஆண்டுகளுக்கும் மேலான கல்வி மற்றும் ஆராய்ச்சி அனுபவம் கொண்ட பேராசிரியர் பஸீஹா அஸ்மி, இளைஞர் விவகாரங்கள், வறுமை ஒழிப்பு, பெண்கள், புலம்பெயர்வு, உள்நாட்டு இடப்பெயர்வுகள் மற்றும் போருக்குப் பின்னரான அபிவிருத்தி உள்ளிட்ட பல சமூகப் பொருளாதாரத் துறைகளில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர்

களனி பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக மஹா விகாரை வங்சிக சியாமோபாலி மஹா...

இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் டொலர் நிதி உதவி!

இலங்கையில் முதலீட்டு ஊக்குவிப்பு, போட்டித்தன்மையை அதிகரித்தல் மற்றும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்...

ஹிஜாப் காரணமாக பரீட்சை முடிவுகள் நிறுத்தப்பட்டது அடிப்படை உரிமை மீறல் செயல்:மனித உரிமைகள் ஆணையம்

ஹிஜாப் அணிந்ததற்காக முஸ்லிம் மாணவர்களின் பரீட்சை முடிவுகளை நிறுத்தி வைத்தது அவர்களின்...

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரிட்டனுடனான வணிகக் குழுவின் புதிய தலைவராக அமீனா ஜியாவுதீன் தெரிவு!

நார்போக் புட்ஸ் (Norfolk Foods) நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான அமீனா ஜியாவுதீன்,...