மூத்த பாடலாசிரியர் ரத்ன ஸ்ரீ விஜேசிங்க, தேசிய நூலக மற்றும் ஆவணவாக்கல் சேவைகள் சபையின் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
இது தொடர்பில் குறிப்பிட்டுள்ள அவர், தனிப்பட்ட காரணங்களால் நான் பதவி விலக முடிவு செய்துள்ளேன். ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் மீதான எனது நம்பிக்கை மாறாமல் உள்ளது.
அவர்களுக்குத் தொடர்ந்து எனது ஆதரவை வழங்குவேன். எனது இந்த முடிவு முற்றிலும் தனிப்பட்டதாகும், குறிப்பாக எனது வயது தொடர்பானதே இதற்குக் காரணம். வேறு எந்தக் காரணமும் இல்லை.
அரசாங்கத்திற்கும் தனக்கும் இடையே எந்தவித முரண்பாடுகளும் இல்லை. தனது பதவி விலகல் ஆகஸ்ட் 11 முதல் நடைமுறைக்கு வரும்-என்று கூறினார்.
