மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வரை இருக்கும். மன்னார் ஊடாக காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரையிலும், ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை முதல் பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.
நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.
மன்னார் ஊடாக காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரையிலும், ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை முதல் பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
