நீர்கொழும்பு சிறைச்சாலையில் மோதல்: கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை துப்பாக்கிச் சூடு!

Date:

இலங்கையின் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளுக்கும் சிறை அதிகாரிகளுக்கும் இடையே இன்று காலை மீண்டும் ஏற்பட்ட பயங்கர மோதலைக் கட்டுப்படுத்த காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று மதியம் சிறைச்சாலையிலுள்ள இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் நிலைமை இன்று அதிகாலைக்குள் ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. எனினும், இன்று காலை மீண்டும் அங்கு புதிய வன்முறை வெடித்தது.

இன்று காலை நடந்த வன்முறையில் சிறை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உட்பட சுமார் 25 பேர் காயமடைந்து நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலையின் தற்போதைய பதற்றமான சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினருடன் இணைந்து அதிரடிப்படையினரும் (STF) அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மதியம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கும், தண்டனை பெற்ற கைதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு கைதிகள் உயிரிழந்ததோடு, 38 பேர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் அவர்களுக்குள் நிலவும் மோதல் போக்கு காரணமாக இந்த வன்முறை வெடித்துள்ளதாகத் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலைமையைக் கண்காணிக்க கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

மோட்டார் வாகன திணைக்களத்துக்கு புதிய ஆணையாளர் நாயகம்

மோட்டார் வாகன திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக ஓய்வுப்பெற்ற எயார் மார்ஷல்...

சுரேஷ் சலேவுக்கு மேலும் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்...

திட்வா புயல் காரணமாக சேதமடைந்த 14 பாலங்களை புனரமைக்க அமைச்சரவை அனுமதி

திட்வா புயல் காரணமாக சேதமடைந்த 14 பாலங்களை புனரமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி...

அமெரிக்காவின் பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலிலிருந்து சிரியா நீக்கம்: அகமது அல்-ஷரா வரவேற்பு

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளுக்கான அமெரிக்காவின் பட்டியலிலிருந்து சிரியா அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டிருப்பதைச் சிரிய...