மாவனல்லை IIMT வளாகத்தின் (IIMT Campus, Mawanella) புதிய உபவேந்தராகப் பேராசிரியர் M.M.M. நஜீம் அவர்கள் உத்தியோகபூர்வமாகக் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதனையொட்டி, கடந்த 17 ஆம் திகதி கல்லூரி வளாகத்தில் சிறப்பான வரவேற்பு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நீர் வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிர்வாகத்துறையின் சிரேஷ்ட பேராசிரியரும், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தருமான பேராசிரியர் M.M.M. நஜீம் (Prof. M.M.M. Najim) அவர்களை IIMT வளாகத்தின் உபவேந்தராக வரவேற்பதில் நிறுவனம் பெருமிதமடைகிறது.
தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைத்துவம், கல்வியியல் சிறப்பு, புதுமைப்படைப்புகள் மற்றும் நிறுவன வளர்ச்சி ஆகியவற்றில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக இந்நிகழ்வு அமைந்தது.
IIMT நிறுவனத்தை மேன்மையான இலக்குகளுக்கும் உலகளாவிய அங்கீகாரத்திற்கும் வழிநடத்தவுள்ள பேராசிரியர் நஜீம் அவர்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பிரகாசமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்பவும், அடுத்த தலைமுறை தலைவர்களை உருவாக்குவதற்கும் ஒன்றிணைந்து செயல்பட எதிர்பார்ப்பதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


