அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் சீட் பெல்ட் விதிக்கு மேலும் 3 மாத கால அவகாசம்

Date:

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து பயணியர் இருக்கைகளிலும் இருக்கைப் பட்டி (Seat Belt) பொருத்துவதற்கான காலக்கெடுவை,   அரசாங்கம் மேலும் மூன்று மாதங்கள் நீட்டித்துள்ளது.

2026 ஜூன் 17 ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம், 2011 ஆம் ஆண்டின் மோட்டார் போக்குவரத்து (அதிவேக நெடுஞ்சாலை) ஒழுங்குவிதிகளில் இதற்கான திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, உற்பத்தியாளர்களால் ஆரம்பத்தில் இருக்கைப் பட்டிகள் பொருத்தப்படாத வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலம் 2026 செப்டம்பர் 19 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வழங்கப்பட்ட காலக்கெடு ஜூன் 19 ஆம் திகதியுடன் நிறைவடைந்திருந்தது.

வீதி விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளையும் கடுமையான காயங்களையும் குறைக்கும் நோக்கில், அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் அனைத்து வாகனப் பயணிகளும் இருக்கைப் பட்டி அணிவதை கட்டாயமாக்கும் விதிமுறை மோட்டார் போக்குவரத்து சட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்தத் திருத்தப்பட்ட ஒழுங்குவிதிகளை நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கான யோசனைக்கு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சரால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

அஸ்வெசும நிதி நாளை மறுதினம் வங்கிக் கணக்குகளுக்கு!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்திற்கான நிதி நாளை மறுதினம் (19) பயனாளி குடும்பங்களின்...

வங்கிக் கணக்குகளை குறிவைத்து புதிய மோசடி; மக்களை எச்சரிக்கும் SLCERT!

இணையம் மற்றும் தொலைபேசி ஊடாக இடம்பெறும் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் குறித்து...

பட்டம் விடுவதால் ஏற்படும் அனர்த்தங்கள்: பிள்ளைகளின் பாதுகாப்பில் கூடுதல் அக்கறை அவசியம்!

பாடசாலை விடுமுறையிலுள்ள மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டுமென...

நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

வறட்சியான வானிலை நிலவியபோதிலும், நாடளாவிய ரீதியில் தற்போது தடையற்ற நீர் விநியோகம்...