Tuesday, November 24, 2026

கொழும்பில் சர்வதேச பட்டத் திருவிழா 2026!

1 min read · 1 reads

கொழும்பில் எதிர்வரும் ஓகஸ்ட் 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள “கொழும்பு சர்வதேச பட்டத் திருவிழா 2026” (Colombo International Kite Festival 2026) நிகழ்வை முன்னிட்டு விசேட போக்குவரத்து மற்றும் வாகன நிறுத்துமிட ஏற்பாடுகளை இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.

பட்டத் திருவிழாவின் தொடக்கமாக சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு விசேட வாகனப் பேரணி ஆரம்பமாகவுள்ளது.

இப்பேரணியானது கொள்ளுப்பிட்டி சந்தை, லிபர்ட்டி சுழற்சி, பம்பலப்பிட்டி சந்தை, தும்முல்ல, ஹோட்டன் பிளேஸ், லிப்டன் சுழற்சி, ரீகல் சந்தை, தாமரை வீதி (Lotus Road) மற்றும் போர்ட் சிட்டி (Port City) ஆகிய கொழும்பின் முக்கிய வீதிகள் ஊடாகப் பயணிக்கவுள்ளது.

இதன்காரணமாக ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, சாரதிகளை மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமையன்று காலி முகத்திடலில் பட்டத் திருவிழா மற்றும் இசை நிகழ்ச்சி பொதுமக்கள் பார்வைக்காக நடைபெறவுள்ளதுநிகழ்வுகளின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மைக்காக 300 போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் உட்பட சுமார் 1,000 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.