யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை மெட்ரோ பேருந்து!

Date:

எதிர்வரும் நாட்களில் புதிய மெட்ரோ பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளதுடன், ஆண்டின் இறுதிக்குள் யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை மெட்ரோ பேருந்து சேவையை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

சீனா மற்றும் பல நாடுகளிலிருந்து பெறப்பட்ட 121 மெட்ரோ பேருந்துகள் தற்போது பதிவு மற்றும் சட்ட நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், அவை நிறைவடைந்தவுடன் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சேவையில் ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

மெட்ரோ பேருந்து நிறுவனம் பல புதிய வழித்தடங்களை ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளதாகவும், அவை விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் ஜப்பானிலிருந்து மேலும் 50 பேருந்துகள் கிடைக்கவுள்ளதால், சேவையை கொழும்பைத் தாண்டி யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை விரிவுபடுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

யாழ்ப்பாணம் மற்றும் கண்டியில் மெட்ரோ பணிமனைகள் அமைக்கும் பணிகளும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசல், எரிபொருள் நுகர்வு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைப்பதே அரசாங்கத்தின் நீண்டகால இலக்காகுமென சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க...

புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு சலீம் ஆசிரியரை தலைவராகக் கொண்ட புதிய நிர்வாக சபை தெரிவு.

நேற்று புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கான புதிய நிர்வாக சபை தெரிவுக்குரிய நிகழ்வுகள்...

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியீடு!

2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு...

இன்று மழை மற்றும் காற்றுடனான வானிலை நிலவும்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை மற்றும் காற்றுடனான வானிலை...