ஆகஸ்ட் முதல் 6 நாட்களில் 42,000க்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை!

Date:

ஆகஸ்ட் மாதத்தின் முதல் 6 நாட்களில் மட்டும் 42,810 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இந்தியாவிலிருந்து 7,827 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், இது மொத்த வருகையில் 18 சதவீதமாகும் (18%).

மேலும், இக்காலப்பகுதியில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 4,922 பேரும், பிரான்ஸிலிருந்து 3,908 பேரும், சீனாவிலிருந்து 3,031 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரசபையினால் வெளியிடப்பட்டுள்ள அண்மைய தரவுகளின்படி, 2026 ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 06 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,386,2228 ஆக அதிகரித்துள்ளது.

இதில் இந்தியாவிலிருந்து 346,057 பேரும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 135,323 பேரும், சீனாவிலிருந்து 91,538 பேரும் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

கணினி அமைப்புக் கோளாறால் கடவுச்சீட்டு விநியோகம் தாமதம்!

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு...

நீதிபதிகளின் ஓய்வு வயது விவகாரம்; சட்டத்தரணிகள் சங்கத்துடன் ஜனாதிபதி சந்திப்பு!

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கு அரசியலமைப்பில் திருத்தம் செய்வதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவு...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது...

நிலவும் சீரற்ற வானிலை: க.பொ.த உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு அவசர உதவி இலக்கங்கள் அறிவிப்பு!

தற்போது நிலவும் சீரற்ற வானிலையால் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு...