புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரியில் தரம் 11 மாணவர்களுக்குப் பாராட்டு விழா!

Date:

புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரியில், தரம் 11 இரண்டாம் தவணைப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரியின் அஸ்வர் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

கல்லூரி அதிபர் I.A. நஜீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதி அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டு மாணவர்களின் கல்விச் சாதனைகளைப் பாராட்டினர்.

இந்நிகழ்வில் சிறப்பு வளவாளராகக் கலந்து கொண்ட அமேசன் கல்லூரி மற்றும் அமேசன் கேம்பஸ் ஆகியவற்றின் நிறுவனர் இல்ஹாம் மரிக்கர், மாணவர்களின் கல்வி முன்னேற்றம் மற்றும் எதிர்கால இலக்குகள் தொடர்பில் பயனுள்ள ஆலோசனைகளையும் ஊக்கமளிக்கும் கருத்துக்களையும் வழங்கினார்.

தரம் 11 மாணவர்களின் கல்வி அடைவுகள் மற்றும் திறமைகளை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ்களும் கௌரவங்களும் வழங்கப்பட்டன. இத்தகைய நிகழ்வுகள் மாணவர்களிடையே தன்னம்பிக்கையை வளர்ப்பதுடன், எதிர்காலத்தில் உயர்ந்த இலக்குகளை நோக்கிச் செல்வதற்கும், தொடர்ந்தும் சிறப்பாகச் செயற்படுவதற்கும் பெரும் ஊக்கமாக அமையும் என நிகழ்வில் உரையாற்றியவர்கள் சுட்டிக்காட்டினர்.

ஒட்டுமொத்தத்தில், மாணவர்களின் எதிர்காலப் பயணத்திற்கு உற்சாகமளிக்கும் வகையில் இந்நிகழ்வு மிகச் சிறப்பாக நிறைவுற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தின் விசேட அறிவித்தல்!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை திட்டமிடப்பட்ட முறையில் நடைபெறுமென பரீட்சைகள்...

நாட்டில் பல பகுதிகளில் 75 மி.மீ அதிக பலத்த மழை!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும்...

தெற்காசியாவின் 2ஆவது அமைதியான நாடாக இலங்கை தேர்வு!

2025 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், பொருளாதார மற்றும் அமைதிக்கான நிறுவனத்தினால் (IEP)...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் தீர்க்கமான நாள்: அரசுத் தரப்பு சாட்சிய விசாரணை நிறைவு!

இலங்கையில் அதிர்வலையை ஏற்படுத்திய 2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான...