குருக்கள்மடம் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை வரும் 24 ஆம் திகதி..!

Date:

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தொடர்புடைய வழக்கு விசாரணை நேற்று (05) களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்டிருந்தது.

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு இன்று களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றில் மேலதிக விசாரணைகளுக்காகவும், வழக்குக்காகவும் அழைக்கப்பட்டிருந்தது.

கடந்த தவணையிலே சோகோ, பிரதான சட்ட வைத்திய அதிகாரி, மட்டக்களப்பு காணி பதிவாளர், பிரதேச செயலாளர், தொல்லியல் திணைக்களம், அதேபோன்று காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்திற்கும் அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால் , காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்தின் சார்பாக அவர்களது சட்டத்தரணி பிரசன்னமாகியிருந்தார். ஏனையவர்கள் மன்றுக்குச் சமூகமளித்திருக்கவில்லை.

அந்தவகையிலே இந்த வழக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி மேலதிக நடவடிக்கைகளுக்காகவும், வழக்கு மாநாட்டுக்காகவும், தவணையிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

பொத்துவில் பாடசாலைக்கு பாகிஸ்தான் தூதுவர் விஜயம்: மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு!

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டொக்டர் நய்யார் நசீர்...

கனமழையால் 35 இடங்களில் நிலச்சரிவு : 6 மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’!

நாட்டில் நிலவும் பலத்த மழைவீழ்ச்சி காரணமாக இதுவரை சுமார் 35 சிறிய...

முஸ்லிம் காங்கிரஸின் புதிய தேசியப் பட்டியல் எம்.பி.யாக ஹபீப் றிபான் நியமனம்!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக ஓட்டமாவடியைச்...

ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தனவின் ‘அம்புலுவாவ: ஆதிக்கத்தை வென்ற சுயாதீனம்’ நூல் வெளியீடு செப்டம்பர் 23 இல்!

"அம்புலுவாவ: ஆதிக்கத்தை வென்ற சுயாதீனம்" (අම්බුළුවාව - පර ආධිපත්‍යය පැරදවූ...