2027ஆம் ஆண்டுக்கான முக்கிய பாடசாலைப் பரீட்சை திகதிகள் அறிவிப்பு

Date:

2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள முக்கிய பாடசாலைப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2027ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அதேவேளை, க.பொ.த. உயர்தரப் பரீட்சை (A/L) ஆகஸ்ட் 3ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சை (GIT) ஒக்டோபர் 24ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதனிடையே, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை (O/L) டிசம்பர் 7ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் திகதி பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட “பஸ் லலித்”

டுபாயில் கைது செய்யப்பட்ட, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல் மற்றும் போதைப்பொருள் கடத்தலில்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவ வழக்கின் தீர்ப்பு செப்டெம்பர் 22ஆம் திகதி

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் தொடரப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு செப்டெம்பர் 22ஆம்...

நாட்டின் பல பிரதேசங்களுக்கு மழைக்கான வாய்ப்பு

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை...

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் 3ஆவது ரந்தோலி பெரஹெரா நாளை: சிறப்புப் போக்குவரத்து திட்டம் அறிவிப்பு!

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர திருவிழாவின்...