சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்

Date:

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்.

சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

அநுராதபுரம், மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

அம்பாறை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக ஏற்படக்கூடிய உள்ளூர் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Popular

More like this
Related

இணையம் ஒரு வாரம் துண்டிக்கப்பட்டால் என்ன நடக்கும்?: டாக்டர் அப்துல் கரீம் பக்காரின் சிந்திக்க வைக்கும் பதிவு!

"தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்களின் அதீத பயன்பாடு மனிதனின் சுயாதீனத்தையும் சிந்தனையையும்...

சமூக வலைத்தளப் பாவனை குறித்து தேசிய ஷூரா சபை விடுத்துள்ள முக்கிய வழிகாட்டல்கள்!

சமீபகாலமாக பேஸ்புக் (Facebook), TikTok, WhatsApp உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இஸ்லாத்திற்கும்...

இலங்கையைச் சேர்ந்த 15 குழந்தைகளுக்கு இலவச இதய அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் வெளிநாட்டு மருத்துவக் குழுவினர்.

காலியில் அமைந்துள்ள கராப்பிட்டிய தேசிய மருத்துவமனையில், மிகவும் சிக்கலான இதய நோய்களால்...

நிலவும் மழையுடனான வானிலை மேலும் தீவிரமடையும்;ஒக்டோபர் 27 வரை எச்சரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களில் மேலும் வலுவடையும் என...