நடப்பு ஆண்டில் நேற்று (12) வரையிலான காலப்பகுதியில் நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், மொத்தம் 91,059 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அந்தப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதில் கம்பஹா மாவட்டத்திலேயே அதிகளவான பாதிப்பு பதிவாகியுள்ளதுடன், அங்கு 19,406 நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
