நேபாள மக்களின் துயரத்தில் பங்கெடுக்கும் இலங்கை – ஜனாதிபதி அனுதாபம்!

Date:

நேபாளத்தின் கடும் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆழ்ந்த கவலையைத் தெரிவித்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கையின் அனுதாபங்களையும் ஆதரவையும் வெளிப்படுத்தியுள்ளார்.

‘எக்ஸ்’ (X) தளத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி அநுர குமார, அனர்த்தத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளில் நேபாளத்திற்கு உதவ இலங்கை தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பத்து மாதங்களுக்கு முன்னர் ஒரு பயங்கரச் சூறாவளியை எதிர்கொண்ட இலங்கை, வெள்ளத்தின் பாதிப்புகளைச் சந்தித்து வரும் நேபாள மக்களின் துயரத்தைப் பகிர்ந்துகொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நேபாள ஜனாதிபதி ராம் சந்திர பௌடெல் மற்றும் பிரதமர் பலேந்திர ஷா உள்ளிட்ட அந்நாட்டு அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் அவர் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் தனது ஆதரவை வெளிப்படுத்திய ஜனாதிபதி, நிவாரணம் மற்றும் மீளமைப்புப் பணிகள் தொடரும் நிலையில் நேபாள அதிகாரிகள் எதிர்கொள்ளும் சவால்களையும் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

கடற்பிரதேசங்களில் பலத்த காற்று

புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கடற்பகுதிகளில்...

விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பும் சர்வதேச முயற்சியில் கிண்ணியா மாணவி நூரி இணைவு: 27ஆம் திகதி இந்தியா பயணம்!

உலகளாவிய ரீதியில் முதல் முறையாக பெண் மாணவிகள் இணைந்து விண்கலமொன்றை விண்வெளிக்கு...

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டமூல வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டம்!

அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான சட்டமூல வரைவு குறித்த ஆலோசனைக் கூட்டம்...

பதினொரு புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

பதினொரு புதிய இராஜதந்திரிகள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர். இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள...