பட்டம் விடுவதால் ஏற்படும் அனர்த்தங்கள்: பிள்ளைகளின் பாதுகாப்பில் கூடுதல் அக்கறை அவசியம்!

Date:

பாடசாலை விடுமுறையிலுள்ள மாணவர்களின் பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டுமென லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் பிரதீப் ரத்னசேகர அறிவுறுத்தியுள்ளார்.

பட்டம் விடுவதால் அனர்த்தங்களுக்கு பிள்ளைகள் முகம்கொடுக்கும் சம்பவங்கள் அதிகம் பதிவாகி வருகின்றன. கவனக்குறைவாக பட்டம் விடுவதால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலை இருப்பதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உயரமான இடங்களிலிருந்து பட்டம் விடும் போது கீழே விழ நேரிடலாம். குழுக்களாக பட்டம் விடும் போது மோதல்கள் ஏற்படலாம். உயர் மின்னழுத்த மின் கம்பிகளுக்கு அருகாமையில் பட்டம் விடுவது மிகவும் ஆபத்தானது.

பட்டத்தின் நூல்கள் மின் கம்பிகளுடன் தொடர்பு கொண்டால் அந்த நூல் வழியாக மின்சாரம் நபருக்கு பாயக்கூடும்.

இதனால் பாடசாலை விடுமுறையில் பிள்ளைகள் எவ்வாறான விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றார்கள் என்பது குறித்து பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமெனவும் வைத்தியர் பிரதீப் ரத்னசேகர அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

வறட்சியான வானிலை நிலவியபோதிலும், நாடளாவிய ரீதியில் தற்போது தடையற்ற நீர் விநியோகம்...

“வரவு எட்டணா, செலவு பத்தணா…”: சமூக ஊடகங்களில் நுகர்வதைவிடப் படைப்பவர்களே முன்னேறுகிறார்கள்!

-Eng. Rifai பட்டய மின்பொறியியலாளர் (Chartered Electrical Engineer), நிலைபேறான மின் உற்பத்தி,...

ஷிரான் பாசிக் விசாரணைக்காக 90 நாட்கள் தடுப்பு காவலில்!

பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் என்று கூறப்படும் ஷிரான் பாசிக்கை, 90...

கல்முனை ஆதார வைத்தியசாலையில் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு நடவடிக்கை!

கல்முனை ஆதார வைத்தியசாலையில் புதிய சிற்றூழியர்களாக ஒன்பது பெண் ஊழியர்கள் நியமிக்கப்பட்டமை...