புனித மக்கா மண்ணில் மிளிரும் இலங்கையின் குரல்: சர்வதேச குர்ஆன் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ஸயீத் முஹம்மத் இப்பத்!

Date:

சவூதி அரேபியாவின் புனித மக்கா நகரில் அமைந்துள்ள புனித மஸ்ஜிதுல் ஹராம் வளாகத்தில், சவூதி இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சின் ஒழுங்கமைப்பில் 2026ஆம் ஆண்டிற்கான 46ஆவது சர்வதேச மன்னர் அப்துல் அஸீஸ் திருக்குர்ஆன் மனனம், பாராயணம் மற்றும் தஃப்சீர் போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகின்றது.

இரு புனித தலங்களின் காவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் அவர்களின் அணுசரனையில் நடைபெற்று வரும் இம்மாபெரும் உலகளாவிய போட்டியில், உலகளவில் 133 நாடுகளைச் சேர்ந்த 334 சிறந்த போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

இம்மாபெரும் சர்வதேச மேடையில், இலங்கையின் பிரதிநிதியாக ஸயீத் முஹம்மத் இப்பத் கலந்துகொண்டு தனது மிகச்சிறந்த குர்ஆன் பாராயணத் திறமையை வெளிப்படுத்தித் தாய்நாட்டிற்குப் பெருமை சேர்த்து வருகின்றார்.

இம்முறை வரலாற்றிலேயே முதன்முறையாகப் பெண் போட்டியாளர்களுக்கான தனிப்பிரிவும், 10 மில்லியன் சவூதி ரியால்களுக்கு மேலான மிகப்பெரிய பரிசுத்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற குர்ஆன் கலை வல்லுநர்களைக் கொண்ட நடுவர் குழுவின் முன்னிலையில் அதிநவீன மின்னணு முறைமையைப் பயன்படுத்தித் துல்லியமாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

புனித கஃபாவின் வழிகாட்டலில் ஒலிக்கும் இலங்கையின் குரல், சர்வதேச அளவில் பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருவதோடு, நாட்டின் பெருமையை உலகரங்கில் உயர்த்திப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஒக்டோபர், நவம்பரில் அதிக மழைவீழ்ச்சி: வெள்ள அபாயத்திற்குத் தயாராகுமாறு வானிலை மையம் எச்சரிக்கை!

இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழக்கத்தை விட அதிக...

மூத்த ஊடகவியலாளர் என். எம். அமீன் அவர்களுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவம்!

இலங்கை ஊடகத்துறையிலும் தமிழ் ஊடகக் பரப்பிலும் பல தசாப்தங்களாகத் தனது பங்களிப்பை...

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையில் வெடி விபத்து; விசாரணைக்காக இரு பொலிஸ் குழுக்கள்!

பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறை வளாகத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம்...

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் பிரபல கலைஞர் நூர்ஜஹான் மர்சூக் அவர்கள் காலமானார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) முஸ்லிம் சேவையில் பல தசாப்தங்களாகத் தனது...