ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, 2021 ஆகஸ்ட் 30 இன் இரவு ஆப்கானிஸ்தானின் வரலாற்றில் சாதாரணமான இரவாக இருக்கவில்லை.
அது அமெரிக்க மற்றும் மேற்குலக ஆக்கிரமிப்பின் இருபது ஆண்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட இரவாகும்.
அன்றைய தினம் கடைசி அமெரிக்கச் வீரர் ஆப்கானிய மண்ணை விட்டு வெளியேறி, தனது நவீன வரலாற்றில் அமெரிக்கா நடத்திய மிக நீண்ட போரின் முடிவை அறிவித்தான்.
அந்த இரவில் நிகழ்ந்தது தொலைதூர நிலப்பரப்பிலிருந்து வெறும் இராணுவ வாபஸ் பெறுதல் மட்டுமல்ல; மாறாக அது நீண்ட கால மோதல்கள் மற்றும் முரண்பாடுகளின் இறுதிக் கட்டமாகவும், எல்லைகளுக்கு அப்பாலிருந்து வரும் வல்லரசுகளுக்கு ஒருபோதும் அடிபணியாத, பல்லூற்றாண்டுகளாகத் தன் சுயாட்சியைப் பேணிவரும் ஒரு நாட்டின் வரலாற்றில் புதியதொரு கட்டத்தின் தொடக்கமுமாக இருந்தது.
பீரங்கிகளாலும் போர் விமானங்களாலும் ஒரு நாட்டின் தலையெழுத்தை மாற்றிவிட முடியாது என்பதை அப்பகுதி மீண்டும் நிரூபித்தது.
இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்த அமெரிக்கா, மிகப்பெரிய இராணுவ, பொருளாதார மற்றும் புலனாய்வுப் பலத்தின் சுமையோடு, நேட்டோ (NATO) கூட்டாளிகளுடனும், அதிநவீன ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களுடன் களமிறங்கியது.
எந்தவொரு பாரம்பரிய எதிரியும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு மாபெரும் வசதிகளுடன் வந்த அது, இந்த வல்லமை மட்டுமே நாட்டை முடக்கி, அதன் மக்களின் மனவுறுதியைத் தகர்த்து, தனது விருப்பத்திற்கேற்ப அதன் எதிர்காலத்தை வடிவமைக்கப் போதுமானது என்று நம்பியது.
ஆனால், கள யதார்த்தமோ முற்றிலும் வேறாக இருந்தது. மறுபுறம், அமெரிக்காவிடம் உள்ள ஆயுதக் களஞ்சியமோ, அதன் கடற்படையோ, அதிநவீன போர் விமானங்களோ அல்லது உலகளாவிய புலனாய்வு வலையமைப்போ இல்லாத எளிய மக்கள் அங்கு இருந்தனர்.
இருப்பினும், அவர்களிடம் மகத்தான நம்பிக்கையும் உறுதியான கோட்பாடும் இருந்தது; தமது நாட்டைப் பாதுகாக்க வேண்டும் என்ற வெறியும், எத்தகைய பாதகமான சூழலிலும் தொடர்ந்து போராடும் மனவுறுதியும், எவ்வளவு வலிமை வாய்ந்ததாக இருந்தாலும் ஆக்கிரமிப்பு என்பது என்றைக்கும் நிலைக்க முடியாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும் அவர்களிடம் இருந்தது.
மாபெரும் இராணுவ பலம் மக்களின் மனவுறுதியை எதிர்த்து நின்றது. ஆக்கிரமிப்பாளர் தன்னிடம் இருந்த அனைத்து அழுத்தங்களையும் வன்முறைகளையும் கட்டவிழ்த்துவிட்டார்.
பகுதிகள் குண்டுவீசித் தாக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டன, வீடுகள் இடிபாடுகளாக மாறின, அப்பாவி மக்கள் பலியாகினர், ஆயிரக்கணக்கானோர் சிறைகளில் அடைக்கப்பட்டனர். இந்தத் தொடர்ச்சியான அழுத்தங்கள் ஆப்கானிய சமூகத்தை மனச்சோர்வடையச் செய்து, அதன் எதிர்ப்பைக் கைவிடச் செய்யும் என்று கணிக்கப்பட்டது.
ஆனால், முடிவு அதற்கு நேர்மாறாக அமைந்தது. அழுத்தம் அதிகரிக்க அதிகரிக்க, போராட்டமும் எதிர்ப்பும் மேலும் வலுப்பெற்றன. இராணுவத் தாக்குதல்களின் தீவிரம் அதிகரிக்க, தங்களைப் பொறுத்தவரை இதுவொரு அரசியல் செல்வாக்கிற்கான சாதாரண மோதல் அல்ல, மாறாக இது ஈமான் (நம்பிக்கை), பூமி, சுதந்திரம் மற்றும் தேசிய உரிமை தொடர்பான புனிதப் போராட்டம் என்ற உறுதியில் பரந்த மக்கள் திரள் நிலைபெற்றது.
ஆண்டுகள் கடக்க கடக்க, ஆக்கிரமிப்பாளர்களின் இராணுவ மற்றும் அரசியல் திட்டங்கள் மிகவும் சிக்கலான யதார்த்தத்தைச் சந்திக்கத் தொடங்கின. சவாலான புவியியல் அமைப்பைக் கொண்ட மற்றும் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து போராடத் தயாராக உள்ள ஒரு சமூகத்தைக் கொண்ட நாட்டில், ஒரு போரில் ராணுவ மேலாதிக்கத்தை அடைவதோ அல்லது ஒரு பகுதியை மட்டும் கைப்பற்றுவதோ நீண்ட போரை வெல்வதற்குப் போதுமானதாக இல்லை.
அமெரிக்காவிடம் அதிநவீன இராணுவத் தொழில்நுட்பம் இருந்தது, ஆனால் அந்தத் தொழில்நுட்பத்தால் அது தேடிக்கொண்டிருந்த அரசியல் வெற்றியை வழங்க முடியவில்லை.
அது வான்வழி பலத்தைக் கொண்டிருந்தது, ஆனால் வான்வெளியைக் கட்டுப்படுத்துவது என்பது நிலத்தைக் கட்டுப்படுத்துவதைக் குறிக்கவில்லை. அது ஒரு பரந்த சர்வதேசக் கூட்டமைப்பைக் கொண்டிருந்தது, ஆனால் அந்தப் பரந்த கூட்டமைப்பு எதிர்ப்பை முடிவுக்குக் கொண்டுவருவதில் வெற்றி பெறவில்லை.
இருபது ஆண்டுகள் கடந்தபோது, காலமே அமெரிக்காவின் இராணுவத் திட்டத்திற்கு எதிராகச் செயல்படத் தொடங்கியது போல் தோன்றியது.
உலகளாவிய மேலாதிக்கத்தை வெளிக்காட்ட வாஷிங்டன் விரும்பிய ஆப்கானிஸ்தான், அந்த மேலாதிக்கத்திற்கே ஒரு கடுமையான சோதனைக் களமாக மாறியது.
புதியதொரு யதார்த்தத்தைத் திணிக்கும் திறனில் நம்பிக்கை கொண்டு களமிறங்கிய நாடு, இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு போர்க்குழியில் இருந்து தப்பியோட பாதுகாப்பான வழியைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
அதன் முடிவு ஒரே இரவில் நிகழ்ந்தது. காபூல் விமான நிலையத்திலிருந்து கடைசி அமெரிக்க விமானமும் புறப்பட்டதுடன், அமெரிக்காவின் இராணுவ இருப்பு அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது.
அதேவேளையில், வெறும் பலத்தை மட்டும் கொண்டு போர்களை வெல்வது எவ்வளவு கடினம் என்பதைக் காட்டும் மிக முக்கியமான காட்சிகளில் ஒன்றாக அந்த வெளியேற்றத்தின் காட்சி உலகின் நினைவில் நிலைத்து நின்றது.
இதன் செலவு சாதாரணமானதல்ல. அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களைச் செலவிட்டன; அமெரிக்க மற்றும் நேட்டோ படைவீரர்கள் பலர் கொல்லப்பட்டும் காயமடைந்தும் வீழ்ந்தனர்.
வாஷிங்டன் தான் எதற்காகப் போருக்குள் நுழைந்ததோ அந்த இறுதி இலக்கை அடையாமலேயே போர் ஆண்டுதோறும் தொடர்ந்தது.
பாரிய இராணுவச் செலவுகள் மற்றும் தீவிர அரசியல்-இராணுவ இருப்புக்குப் பிறகு, இருபது ஆண்டுகளுக்குப் பின் முடிவு எட்டப்பட்டது.
கடைசி அமெரிக்கச் வீரர் இரவோடு இரவாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினான்.
இவ்வாறு, ஆப்கானியப் போர் என்பது வெறும் போர்க்கள எல்லைகளையும் தாண்டிய ஒரு மூலோபாயத் தோல்வியாக உருவெடுத்தது.
இராணுவ பலத்தின் எல்லைகள் என்ன, தன் விருப்பத்தை நிராகரிக்கும் சமூகங்களின் மீது நவீன படைகளால் அரசியல் தீர்வுகளைத் திணிக்க முடியுமா, வெளி சக்திகளால் நாடுகளின் எதிர்காலத்தை உருவாக்க முடியுமா போன்ற பல ஆழமான கேள்விகளை இந்த அனுபவம் எழுப்பியது.
ஆனால், மிக முக்கியமான பாடம் ஆயுதங்களின் அளவிலும் அல்ல, மாறாக உறுதியின் தன்மையில்தான் அடங்கியிருந்தது. வலிமையான ஆயுதங்களைக் கொண்டிருப்பது மக்களின் மனவுறுதியைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருப்பதைக் குறிக்காது என்பதையும், இராணுவ மேலாதிக்கம் என்பது கள வெற்றிகளைத் தரலாமே தவிர, ஒட்டுமொத்த சமூகத்தையும் அடிபணிய வைக்கும் நீண்ட போரில் அது எப்போதுமே வெற்றியை உத்தரவாதம் செய்யாது என்பதையும் ஆப்கானிய அனுபவம் நிரூபித்துக் காட்டியது.
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, ஆப்கானிய மக்கள் ரத்தம், இழப்புகள், அழிவுகள், இடப்பெயர்வுகள், சிறைவாசங்கள் மற்றும் இன்னல்கள் எனப் போருக்கான பெரும் விலையைக் கொடுத்தனர்.
ஆனால் இறுதியில், அல்லாஹ்வின் கிருபையாலும், இந்த நாட்டின் மாவீரர்களின் தியாகங்களாலும் தமது மண்ணிலிருந்து வெளிநாட்டுப் படைகள் வெளியேறுவதைக் கண்கூடாகக் கண்டனர்.
எனவே, கடைசி அமெரிக்கச் வீரர் வெளியேறிய அந்த இரவு என்பது கடந்த காலப் பக்கங்களில் சேர்க்கப்படும் வெறும் தேதியல்ல; மாறாக, அதே அனுபவத்தை மீண்டும் நிகழ்த்த நினைக்கும் ஒவ்வொருவருக்கும் தெளிவான அரசியல் மற்றும் வரலாற்றுச் செய்தியைச் சொல்லும் தருணமாகும்.
ஆப்கானிஸ்தான் என்பது ஆக்கிரமிப்பு அனுபவங்களுக்குப் புதியதொரு பூமியல்ல; வெளிநாட்டுத் தலையீடுகளைச் சந்தித்தது, போர்களை எதிர்கொண்டது, பல தசாப்தங்களாக மோதல்களுடன் வாழ்ந்ததுமான பூமி அது.
எதிரியிடம் அதிநவீன ஆயுதங்கள் இருப்பதாலேயே தனது பூமியைப் பாதுகாக்கும் உரிமையை ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது என்பதை அதன் மக்கள் அந்த அனுபவங்களிலிருந்து கற்றுக் கொண்டனர்.
இக்காரணத்தினால், நேரடி பலப்பிரயோகம், அழுத்தம் அல்லது தலையீடு என எதன் மூலமாகவாவது ஆப்கானியர்களின் மீது வெளிநாட்டு விருப்பங்களைத் திணிக்க முயலும் எந்தவொரு புதிய முயற்சியும், முதலாவதாக இருபது ஆண்டு கால போரின் நினைவகத்தையே எதிர்கொள்ள நேரிடும்.
ஆப்கானிய வரலாறு என்பது நாட்டிற்குள் நுழைந்த படைகளின் பெயர்களை மாத்திரம் நினைவில் வைத்திருப்பதில்லை; மாறாக, அந்தப் படைகள் எவ்வளவு அவமானகரமான முறையில் நாட்டை விட்டுத் துரத்தப்பட்டன என்பதையும் அது பொறித்து வைத்துள்ளது.
இறுதியாக, அந்த இரவின் மிக முக்கியமான பாடம் இதுவாகத்தான் இருக்க முடியும்: சக்தியால் ஒரு நிலத்திற்குள் நுழைய முடியும், படைகளால் நகரங்களைக் கைப்பற்ற முடியும், போர் விமானங்களால் போர்களைத் தற்காலிகமாகத் தீர்க்க முடியும்; ஆனால், எந்தவொரு மக்களையும் தனது சுயவிருப்பத்தைத் துறக்குமாறு அவற்றால் கட்டாயப்படுத்த முடியாது.
2021 ஆகஸ்ட் 30 இன் இரவு என்பது நீண்ட காலப் போரின் ஒரு அத்தியாயத்தின் முடிவாக இருந்தது. ஆனால், ஆப்கானியர்களின் நினைவுகளில் அது எல்லாவற்றிற்கும் மேலாக, கடைசி அமெரிக்கச் வீரர் வெளியேறிய இரவாகவும், பலத்தை நம்பி ஆப்கானிஸ்தானை அடிபணியச் செய்யத் துடித்த இருபது ஆண்டு காலக் கணக்கீடுகள் தவிடுபொடியாய்ச் தகர்ந்த இரவாகவும் என்றென்றும் நிலைத்திருக்கும்.
ஒரு முஸ்லிமின் ஈமானின் முன்னேயும், நிலத்தின் மீதான மக்களின் உறுதியின் முன்னேயும் அகந்தை தகர்ந்து போன வரலாற்றுச் சிறப்புமிக்க இரவு அது!
-ஆப்காளிஸ்தானின் ஹுரியத் வானொலியில் ஒலிபரப்பான ஆக்கம்!
