அனோஜனின் மேன்முறையீட்டுக்காக 5 பேர் கொண்ட குழு சவூதி பயணம்!

Date:

இலங்கை பிரஜையான சிவராசா அனோஜனுக்கு சவூதி அரேபியாவில் விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கான சட்ட வழிகளை ஆராய்வதற்காக, ஐவரைக் கொண்ட உயர் மட்டக் குழு நாளை சவூதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரி ஒருவர் உள்ளிட்ட 5 பேர் அடங்கிய குழுவினர் இதில் இடம்பெறுகின்றனர்.

சவூதி அரேபியாவில் உள்ள உள்ளூர் சட்டத்தரணிகளைச் சந்தித்து அனோஜனின் வழக்கு நிலைமைகள் குறித்துக் கலந்துரையாடுவதுடன், அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீட்டைச் சமர்ப்பிப்பதற்கான சட்ட நடைமுறைகளை முழுமையாக ஆராயவும் உள்ளனர்.

சவூதி சட்ட விதிகளுக்கு அமைவாக மேன்முறையீடு துல்லியமாகத் தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக உள்ளூர் சட்டப் பிரதிநிதிகளுடன் தொடர் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என பைசர் முஸ்தபா உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையைக் குறைப்பதற்குத் தேவையான அவசியமான இராஜதந்திர முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

இலங்கை பொருளாதார மீட்சியில் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது

தொடர்ந்து 12 காலாண்டுகளாக வளர்ச்சி கண்டதன் மூலம் இலங்கையின் பொருளாதாரம் நெருக்கடிக்கு...

கொழும்புவில் முதல் இந்தியா-இலங்கை சைபர் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம்

கொழும்புவில் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையேயான முதலாவது சைபர் பாதுகாப்பு...

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை...