Sunday, November 1, 2026

இலங்கைக்கான விமான சேவைகளை மீள ஆரம்பித்த 3 நிறுவனங்கள்

1 min read · 10 reads

மூன்று சர்வதேச விமான சேவைகள் இலங்கைக்கான விமானப் பயணங்களை மீள ஆரம்பித்துள்ளன. எதிர்வரும் குளிர்கால விடுமுறையை முன்னிட்டு ஐரோப்பிய பயணிகள் பெருமளவில் இலங்கை போன்ற ஆசிய நாடுகளுக்கு சுற்றுலா மேற்கொள்வார்கள்.

இதற்கமைய ரஷ்யாவை தளமாகக் கொண்டுள்ள Azur விமான சேவை மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கான விமானப் பயணங்களை மீள ஆரம்பித்தள்ளது. எதிர்வரும் நவம்பர் 2ம் திகதி முதல் இந்த விமான சேவை இடம்பெறும்.

அத்துடன் பிரான்சிற்கு சொந்தமான France Bee விமான நிறுவனம் இலங்கை நோக்கிய தனது பயணங்களை மீள ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கி சேவைகளை ஆரம்பிக்க குறித்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதேவேளை ரஷ்யாவில் இயங்கும் S7 என்ற விமான நிறுவனம் சேர்பியாவிலிருந்து கட்டுநாயக்க நோக்கி எதிர்வரும் டிசம்பரில் விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.