இலங்கையின் பல பகுதிகளில் பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

Date:

பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும், குருநாகல், பொலன்னறுவை, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேல் மற்றும் வடக்கு மாகாணங்களின் கடலோரப் பகுதிகளிலும், காலி மாவட்டத்திலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்குப் பொதுமக்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான வானிலை நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

தலைமுடி, பச்சைக்குத்தல் தொடர்பில் பரவும் வதந்திகள் – நீதியமைச்சர் கண்டனம்!

நாட்டில் அதிகரித்து வரும் பாதாள உலகக் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களைக்...

இலங்கையில் டெங்கு தாக்கம்; இதுவரை 79 மரணங்கள் பதிவு!

இந்த ஆண்டின் இதுவரை காலப்பகுதிக்குள் டெங்கு நோய்த் தாக்கம் காரணமாக 79...

ஆறு மாதங்களில் நிலுவை வாகன இலக்கத் தகடுகள் விநியோகம்!

இலங்கையில் நிலுவையில் உள்ள 650,000 வாகன இலக்கத் தகடுகள் மற்றும் 450,000...

அசாமில் அரச மற்றும் வன நிலங்களை ஆக்கிரமித்ததாகக் கூறி 1,100க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் அகற்றம்!

அசாம் மாநிலத்தில் அரச மற்றும் வன நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மேற்கொள்ளப்பட்ட...