நிலவும் மழையுடனான வானிலை மேலும் தீவிரமடையும்;ஒக்டோபர் 27 வரை எச்சரிக்கை
நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களில் மேலும் வலுவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இலங்கையை சூழ இடை அயன மண்டல ஒன்றிணைவு வலயம் (ITCZ) காணப்படுவதுடன், சில பகுதிகளில் நாள் முழுவதும் மழை பெய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சில பகுதிகளில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்து வருவதுடன், நாளைய தினத்திலும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் நாள் முழுவதும் மழை நிலைமை தொடர்ந்து நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடை அயன மண்டல ஒன்றிணைவு வலயத்தின் செல்வாக்கு காரணமாக, ஒக்டோபர் 23 ஆம் திகதியளவில் அந்தமான் தீவுகளைச் சூழ குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒன்று உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதால், அந்த நிலைமை மேலும் தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் என அவர் கூறுகிறார்.
இதனால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் எதுவும் இல்லை என்றபோதிலும், காற்றுப் ஓட்டம் இலங்கை ஊடாக வீசுவதன் காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் காணப்படும் மழை நிலைமை இந்த மாதம் 27 ஆம் திகதி வரை தொடர்ந்து நீடிக்கும் என பணிப்பாளர் சுட்டிக்காட்டுகிறார்.