உலகின் சிறந்த பொதுப் போக்குவரத்து நகரங்களின் பட்டியலில் ரியாத் மெட்ரோ: அமெரிக்க நிறுவனங்களின் பங்களிப்புடன் மாபெரும் சாதனை!

Date:

உலகின் அதிநவீன மற்றும் லட்சியப் போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘ரியாத் மெட்ரோ’ (Riyadh Metro) திட்டத்தின் வடிவமைப்பு மற்றும் நிர்மாணப் பணிகளில் அமெரிக்க நிறுவனங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன.

பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் அமெரிக்காவின் நிபுணத்துவம் மூலம் உருபெற்ற இப்போக்குவரத்து அமைப்பு, தற்போது ‘டைம் அவுட்’ (Time Out) நிறுவனத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த பொதுப் போக்குவரத்து நகரங்கள் பட்டியலில் 16 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதன் மூலம் அரபு நாடுகளின் பட்டியலில் ரியாத் முதலிடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகப்பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றான ரியாத் மெட்ரோ திட்டமானது, அமெரிக்க மற்றும் சவூதி நாடுகளுக்கு இடையிலான வெற்றிகரமான கூட்டுறவை வெளிப்படுத்தும் ஒரு சான்றாகத் திகழ்கிறது.

திட்டமிடல் முதல் வடிவமைப்பு வரையிலான பல்வேறு கட்டங்களில் அமெரிக்க பொறியியல் வல்லுநர்களின் பங்களிப்பு இம்மாபெரும் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறப் பெருமளவில் உதவியுள்ளது.

சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் பொதுப் போக்குவரத்து சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு குறுகிய காலத்திற்குள் இந்த உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த மெட்ரோ வலையமைப்பு, நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதோடு பொதுமக்களின் பயணத்தை மிகவும் எளிமையாக்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

தலைமுடி, பச்சைக்குத்தல் தொடர்பில் பரவும் வதந்திகள் – நீதியமைச்சர் கண்டனம்!

நாட்டில் அதிகரித்து வரும் பாதாள உலகக் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களைக்...

இலங்கையில் டெங்கு தாக்கம்; இதுவரை 79 மரணங்கள் பதிவு!

இந்த ஆண்டின் இதுவரை காலப்பகுதிக்குள் டெங்கு நோய்த் தாக்கம் காரணமாக 79...

ஆறு மாதங்களில் நிலுவை வாகன இலக்கத் தகடுகள் விநியோகம்!

இலங்கையில் நிலுவையில் உள்ள 650,000 வாகன இலக்கத் தகடுகள் மற்றும் 450,000...

அசாமில் அரச மற்றும் வன நிலங்களை ஆக்கிரமித்ததாகக் கூறி 1,100க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் அகற்றம்!

அசாம் மாநிலத்தில் அரச மற்றும் வன நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மேற்கொள்ளப்பட்ட...