Sunday, November 22, 2026

காசா போரில் கொல்லப்பட்ட பாலஸ்தீனப் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 263 ஆக உயர்ந்தது.

1 min read · 1 reads

காசா பகுதியில் 2023 அக்டோபர் முதல் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களில், முஹம்மது அப்தெல் அஜீஸ் அல்-நஜ்ஜார்  என்ற பாலஸ்தீனப் பத்திரிகையாளர் உயிரிழந்துள்ளார்.

இதன் மூலம் காசா போரில் கொல்லப்பட்ட பாலஸ்தீனப் பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 263 ஆக உயர்ந்துள்ளது.

செப்டம்பர் 30 அன்று தல் அல் ஹவா (Tal al-Hawa) பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் வேன் மீது இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 6 பேர் உட்பட, குறைந்தபட்சம் 7 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் இவர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர்ச் செய்திகளையும் உண்மை நிலவரங்களையும் உலகிற்குத் தெரிவித்து வந்த பத்திரிகையாளர்கள் தொடர்ந்து இலக்கு வைக்கப்பட்டு வருவது சர்வதேச சமூகத்தினரிடையே பெரும் கவலையையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.