பல நாள் தேடுதலுக்குப் பின்னர் இராணுவத்தினரின் உதவியுடன் ‘அக்போ’ யானை பாதுகாப்பாக மீட்பு!

Date:

இலங்கையின் தந்தம் கொண்ட காட்டு யானையான ‘அக்போ’ (Agbo), இராணுவத்தினரின் உதவியுடன் இன்று (19) அநுராதபுரம் மாவட்டத்தின் நச்சதுவ இஹத்தாவ வனப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய, யானையைத் தேடும் நடவடிக்கைக்கு உதவுவதற்காக இலங்கை இராணுவத்தினரைக் கொண்ட விசேட குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டது.

பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தவின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

ஆரம்பகட்டமாக 30 இராணுவத்தினரைக் கொண்ட படைப்பிரிவு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதுடன், தேடுதலை விரைவுபடுத்தும் நோக்கில் பின்னர் இராணுவத்தினரின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது.

இதன்போது, வனவிலங்கு அதிகாரிகளுடன் நெருக்கமாக இணைந்து செயற்பட்ட இராணுவத்தினர், தந்தம் கொண்ட காட்டு யானையான அக்போவைக் கண்டறியும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

தலைமுடி, பச்சைக்குத்தல் தொடர்பில் பரவும் வதந்திகள் – நீதியமைச்சர் கண்டனம்!

நாட்டில் அதிகரித்து வரும் பாதாள உலகக் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களைக்...

இலங்கையில் டெங்கு தாக்கம்; இதுவரை 79 மரணங்கள் பதிவு!

இந்த ஆண்டின் இதுவரை காலப்பகுதிக்குள் டெங்கு நோய்த் தாக்கம் காரணமாக 79...

ஆறு மாதங்களில் நிலுவை வாகன இலக்கத் தகடுகள் விநியோகம்!

இலங்கையில் நிலுவையில் உள்ள 650,000 வாகன இலக்கத் தகடுகள் மற்றும் 450,000...

அசாமில் அரச மற்றும் வன நிலங்களை ஆக்கிரமித்ததாகக் கூறி 1,100க்கும் மேற்பட்ட முஸ்லிம் குடும்பங்கள் அகற்றம்!

அசாம் மாநிலத்தில் அரச மற்றும் வன நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி மேற்கொள்ளப்பட்ட...