சவூதிக்கான பயணத்தை 24 வரை நிறுத்திய ஸ்ரீலங்கன்

Date:

சவூதி அரேபியாவின் ரியாத் மற்றும் தமாம் விமான நிலையங்களுக்கான சேவைகளை எதிர்வரும் 24ம் திகதி இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் தீர்மானித்துள்ளது.

ஏற்கனவே விமான சேவைகளை எதிர்வரும் 18ம் திகதி வரை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும் அதனை 24 வரை நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பு நிலைமைகளை கவனத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கன் நிறுவனம் விசேட அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது. தமது பயணிகள் மற்றும் அலுவலக குழுவினரின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

வணிக விமான சேவைகளை நடத்துவதற்கு பொருத்தமான சூழல் நிலவுவதை உறுதி செய்ததன் பின்னர் விமான சேவைகளை மீள ஆரம்பிக்கவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை இலங்கைக்குள் இருக்கும் பயணிகள் 1979 இலக்கத்தின் ஊடாகவும் வெளிநாடுகளிலிருந்து பயணிகள் +94 11 777 1979 என்ற இலக்கத்திற்கு அழைத்து பெற முடியும்.

அத்துடன் +94 74 444  1979 என்ற வட்ஸ்அப் இலக்கத்தின் ஊடாகவும் தகவல்களை பெற முடியுமென ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

லிட்ரோ சமையல் எரிவாயு தட்டுப்பாட்டிற்கு விரைவில் தீர்வு.

மேல் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் கடந்த சில நாட்களாக...

சிராந்தி ராஜபக்ஷவுக்கு பிணை; நீதிமன்றம் உத்தரவு!

‘சிரிலிய சவிய’ நிதியுடன் தொடர்புடைய கணக்கில் நிதியைக் குற்றவியல் ரீதியாக முறைகேடாகப்...

ஞானசார தேரர் பொதுமன்னிப்பு: ஜனாதிபதி தகுந்த நேரத்தில் உரிய முடிவு எடுப்பார் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவது குறித்த கோரிக்கைகள்...

பிரகீத் எக்னெலிகொட வழக்கு மீண்டும் விசாரணைக்கு; சுரேஷ் சலே ஆஜர்!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில்...