தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் மற்றும் ராணி சுதிதா 19ஆவது தேசிய திருக்குர்ஆன் மனனப் போட்டியில் பங்கேற்பு!

Date:

தாய்லாந்து நாட்டின் மன்னர் மகா வஜிராலோங்கோர்ன்  மற்றும் ராணி சுதிதா ஆகியோர் 2026 அக்டோபர் 10 அன்று தெற்கு தாய்லாந்தின் பட்டானி  மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

அங்கு நடைபெற்ற 19ஆவது தேசிய திருக்குர்ஆன் மனனப் போட்டியின் (19th National Quran Recitation Competition) நிறைவு விழாவில் அவர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் போது, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான கோப்பைகளை வழங்கிய மன்னர் மற்றும் ராணி, இஸ்லாமிய மதத் தலைவர்களைச் சந்தித்துரையாடியதுடன், சிறந்த இமாம்கள் மற்றும் இஸ்லாமியப் பள்ளி மாணவர்களுக்கு விருதுகளையும் வழங்கி கௌரவித்தனர்.

அரண்மனை விஜயத்தின் ஒரு பகுதியாக, அங்கு வருகை தந்திருந்த மக்களுக்காக அரச மருத்துவக் குழுவினர் (Royal Medical Team) சிறப்பு முகாம் அமைத்து 787 பேருக்கு இலவச மருத்துவச் சிகிச்சைகளை வழங்கினர்.

அத்துடன், நிகழ்வில் பங்கேற்ற திரளான மக்களுக்கு ஹலால் உணவுகளும் வழங்கி உபசரிக்கப்பட்டன.

தாய்லாந்தின் பல்வேறு சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் வலுப்படுத்தும் வகையில் அரச தம்பதியரின் இந்த விஜயம் அமைந்திருந்ததாகப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஒக்டோபர் மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு நாளை வங்கிக் கணக்குகளில்!

அஸ்வெசும (Aswesuma) நலத்திட்ட உதவிகளுக்கான 2.04 பில்லியன் ரூபாயை, தகுதியுள்ள பயனாளிகளின்...

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 3.7% ஆக இருக்குமென கணிப்பு!

சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது அண்மைய ‘உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட’...

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. மேல்,...