மாகும்பர Park & Ride வாகன பயன்பாடு 55 வீதமாக உயர்வு

Date:

இந்த ஆண்டின் 3வது காலாண்டில் மாகும்பர Park & Ride வசதிகள் ஊடாக வாகன பயன்பாடு முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 54.9 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

இந்த வசதிகளை பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை முதல் காலாண்டில் 34284 ஆக காணப்பட்ட போதிலும் 3வது காலாண்டில் அது 53129 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி 10 பஸ்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட மெட்ரோ பஸ் சேவையுடன் மாகும்பர Park & Ride வசதிகளை பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதாக பிரதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது தனிப்பட்ட வாகனங்களை பயன்படுத்தும் மக்கள் நாளாந்த போக்குவரத்து தேவைக்கென சௌகரியமான, பாதுகாப்புமிக்க மற்றும் நம்பிக்கைக்குரிய பொது வாகன சேவையொன்றை தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் இதனூடாக உருவாகியுள்ளதென பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

வெறுப்புணர்வுக்கு அங்கீகாரம்; நவி பிள்ளைக்கு நோபல் பரிசு அறிவிப்பிற்கு இஸ்ரேல் கடும் கண்டனம்!

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் ஆர்வலரும் முன்னாள் சர்வதேச நீதிமன்ற நீதிபதியுமான...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது...

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு!

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிற்கு (Dr. Jagath Wickramaratne) எதிராக எதிர்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை: கைது செய்யப்படுவதைத் தடுக்க விடுத்த மனு தள்ளுபடி – உயர் நீதிமன்றத்தில் கோட்டாபய மேன்முறையீடு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில், பயங்கரவாதத்...