வெலிகம, கப்பரதோட்டை கடற்கரைப் பகுதியில், 100 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெராயின் போதைப்பொருளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) கைப்பற்றியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, மாத்தறை – மிரிஸ்ஸ கடற்கரைப் பகுதியில் போதைப்பொருள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும், தலா 120 கிலோகிராமிற்கும் அதிக எடையுள்ள ஆறு மூட்டைகள் கண்டெடுக்கப்பட்டிருந்தன.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் சமீபத்திய தகவலின்படி, கைப்பற்றப்பட்டவை ஹெராயின் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதன் மொத்த எடை 100 கிலோகிராமிற்கும் அதிகமாகும்.
