இலங்கையின் பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கத்துடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தீவிர மின்னல் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி, நாட்டின் 18 மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’ (Red Alert) மற்றும் 7 மாவட்டங்களுக்கு ‘அம்பர் எச்சரிக்கை’ பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இன்று (15) காலை 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அவசர எச்சரிக்கை அறிவித்தல், நாளை (16) அதிகாலை 1.00 மணி வரை செல்லுபடியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமத்திய, கிழக்கு, மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்கள்
கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, கம்பஹா, கொழும்பு மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்கள்.
மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த மின்னல் தாக்குதல்கள் இடம்பெறுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
தற்காலிக பலத்த காற்று மற்றும் பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்கள்:
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாகப் பலத்த பலத்த காற்றும் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மின்னல் மற்றும் பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய அசம்பாவிதங்கள் மற்றும் சேதங்களைக் குறைப்பதற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
