Tuesday, November 24, 2026

7 இலட்சம் லிட்ரோ எரிவாயு நாளைய தினம் சந்தைக்கு

1 min read · 1 reads

7 இலட்சம் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் நாளைய தினம் (27) சந்தைக்கு விநியோகிக்கப்படுமென லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிட்ரோ எரிவாயுவிற்கு சந்தையில் நிலவும் அதிக கேள்வி மற்றும் நுகர்வோர் தேவைகளை கவனத்திற்கொண்டு எரிவாயு தொகை அடங்கிய கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.

கடந்த ஒக்டோபர் மாதம் 22ம் திகதி நாட்டை அண்மித்த எரிவாயு அடங்கிய கப்பல் மற்றும் கடந்த ஒக்டோபர் மாதம் 24ம் திகதி வருகை தந்த கப்பலில் 3900 மெட்ரிக் தொன் எரிவாயு தொகை நாட்டை வந்தடைந்தது.

இதற்கமைய எரிவாயு விநியோகத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீட்டுப் பாவனை எரிவாயு சிலிண்டர்களை தட்டுப்பாடின்றி நுகர்வோர் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.