GIT பரீட்சை தொடர்பான சந்தேகங்களுக்கு 1911 என்ற இலக்கத்தில் தொடர்புகொள்ளலாம்!

Date:

தரம் 12 மாணவர்களுக்கான பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சை (2027 க.பொ.த. உயர்தரப் பரீட்சை) எதிர்வரும் 24ஆம் திகதி சனிக்கிழமை அன்று நாடு முழுவதும் உள்ள 1,520 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள்  திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தப் பரீட்சைக்கான அனுமதி அட்டை ஏற்கனவே பாடசாலை அதிபர்கள் மற்றும் தனியார் பாடசாலைத் தலைவர்களுக்குத் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதுடன், இன்று (6) முதல் அனைத்துப் பரீட்சார்த்திகளும் www.doenets.lk என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் ஊடாகத் தங்களது அனுமதி அட்டைகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகளில் காணப்படும் பெயர், மொழிமூலம் மற்றும் பாலினம் (ஆண்/பெண்) தொடர்பான திருத்தங்களை மேற்கொள்வதற்காக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அக்டோபர் 19ஆம் திகதி நள்ளிரவு வரை வழங்கப்பட்டிருந்த அவகாசம், அக்டோபர் 21ஆம் திகதி மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தப் பரீட்சை தொடர்பான மேலதிக விசாரணைகள் அல்லது சந்தேகங்களுக்குப் பரீட்சைத் திணைக்களத்தின் 1911 என்ற நேரடி அழைப்பு இலக்கம், 0112784208 மற்றும் 0112784537 ஆகிய தொலைபேசி எண்கள், 0112784422 என்ற தொலைநகல் இலக்கம் அல்லது gcealexam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி ஆகிய தொடர்பாடல் வழிகள் ஊடாகத் தொடர்புகொண்டு விளக்கங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

யோஷித ராஜபக்ஷவின் பிரித்தானியப் பயிற்சிக்காக £24,536 அரசுப் பணம் செலவு: கொழும்பு உயர் நீதிமன்றில் சாட்சியம்!

மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் முன்னாள் கடற்படை லெப்டினன்டுமான யோஷித ராஜபக்ஷ, பிரித்தானியாவில்...

ஜனாதிபதி செயலகத்தின் முன்பு போராட்டம் நடத்துவதற்குத் தடை!

உலப்பனே சுமங்கல தேரர் உட்பட 54 பேர், கொழும்பு கோட்டை ஜனாதிபதி...

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்றும் பலத்த மழை எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்...

ஜனாதிபதி செயலகத்தை நோக்கி தேரர்களின் நடைபேரணி !

சிறை தண்டனை அனுபவித்து வரும் கலகொட அத்தே ஞானசார தேரரை பொதுமன்னிப்பின்...