அக்கரைப்பற்று புத்தகக் கண்காட்சி 2026-இல் நடைபெற்ற அரபு எழுத்தணி கலை அறிமுக நிகழ்ச்சி.

Date:

அக்கரைப்பற்றில் ஒக்டோபர் 09 முதல் 13 வரை நடைபெற்ற அக்கரைப்பற்று புத்தகக் கண்காட்சியில், இம்முறை முஸ்லிம்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான அரபு எழுத்தணிக் கலையை அறிமுகம் செய்யும் விசேட செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

அகில இலங்கை அரபு எழுத்தணிக் கலை சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், அமைப்பின் ஸ்தாபகரும் தலைவருமான ஷேக் ஏ.பி.எம். அஷ்ரப் கலந்துகொண்டதோடு, அக்கரைப்பற்று மாநகர மேயர் ஏ.எல்.எம். அதாவுல்லா அவர்கள் கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டு இச்செயற்பாடுகளைப் பார்வையிட்டார்.

அமைப்பின் வளவாளரும் உபதலைவருமான அஷ்ஷேக் ஜுனைத் நளீமி அவர்கள் இங்கு நடைபெற்ற அரபு எழுத்தணிக் கலையில் முக்கிய பங்காற்றினார்.

கண்காட்சிக்கு வருகை தந்த பொதுமக்களுக்கும் கலை ஆர்வலர்களுக்கும் அரபு எழுத்தணிக் கலையின் அடிப்படை அம்சங்கள், எழுத்துணியின் பயன்பாடு, வடிவமைக்கும் நுட்பங்கள் தொடர்பாக விளக்கப்படுத்தப்பட்டதோடு, வருகை தந்தவர்களுக்கு அரபு எழுத்துக்களை எழுத்தணி மூலம் எழுதி காண்பித்து இக்கலையின் நுணுக்கங்களையும் அழகியல் சிறப்புகளையும் விளக்கினார்.

சிறப்பான இக்கண்காட்சியில் அரபு எழுத்தணி தொடர்பான கலையை அறிமுகம் செய்யவும் காட்சிப்படுத்தவும் வாய்ப்புகளை வழங்கிய அக்கரைப்பற்று புத்தகக் கண்காட்சி ஏற்பாட்டாளர், சமூக செயற்பாட்டாளர் திரு. சிராஜ் மஷூர் அவர்களுக்கு அகில இலங்கை அரபு எழுத்தணி சங்கம் நன்றிகளைத் தெரிவித்துள்ளது.

மேலும், கலையின் மூலம் இச்சமூகத்தின் அடையாளத்தை வெளிபடுத்தவும் பாதுகாக்கவும் ஷேக் ஏ.பி.எம். அஷ்ரப் தலைமையில் அரபு எழுத்தணிக் கலை அமைப்பினரின் பணிகள் காலத்தின் தேவையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஜனாதிபதி செயலகத்தை நோக்கி தேரர்களின் நடைபேரணி !

சிறை தண்டனை அனுபவித்து வரும் கலகொட அத்தே ஞானசார தேரரை பொதுமன்னிப்பின்...

உதவும் கரங்களின் உன்னதமான பணி; புத்தளம் சாஹிராவுக்கு பஸ் நன்கொடை!

புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையானது இப்பகுதியில் உள்ள முக்கியமான ஆண்கள் பாடசாலையாகும். இப்பாடசாலையில்...

நோர்வுட் அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் ஒப்புதல்!

நோர்வுட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதியை மோசடியாகப் பெற்றுக்கொண்டதாகத் தாமாக முன்வந்து...