இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 8 வான் கதவுகள் திறப்பு!

Date:

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 30 வான் கதவுகளில் எட்டு கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, வினாடிக்கு 7,884 கனஅடி நீர் கலா ஓயாவில் திறந்துவிடப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், கலா ஓயாவை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அங்குள்ள நீர்த்தேக்கத்தின் வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

கனமழை காரணமாக முன்னதாக இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றில் ஒரு கதவு இன்று (22) காலை தானாக மூடப்பட்டுள்ளது.

எனினும், மழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில், நீர்த்தேக்கத்தின் ஏனைய வான் கதவுகளும் தானாகத் திறக்கப்படக்கூடும் எனப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, மேல் கொத்மலை அணைக்குக் கீழ்ப்பகுதியில் கொத்மலை ஓயாவின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நிலவும் மழையுடனான வானிலை மேலும் தீவிரமடையும்;ஒக்டோபர் 27 வரை எச்சரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலை எதிர்வரும் நாட்களில் மேலும் வலுவடையும் என...

முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் PTA-வை விட மிகவும் ஆபத்தானது: உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டு

‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல்’ எனும் தலைப்பிலான சட்டமூலத்தின் அரசியலமைப்புச் செல்லுபடியாகும் தன்மையை...

பேருவளை அப்ரார் கல்வி அறக்கட்டளையின் புலமைப்பரிசில் வழங்கும் விழா ஒக்டோபர் 25..

பேருவளை அப்ரார் கல்வி அறக்கட்டளையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புலமைப்பரிசில் வழங்கும் விழா,...

வானிலையில் திடீர் மாற்றம்; நாடு முழுவதும் மழை

நாட்டை அண்மித்துள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் தாழமுக்கமாக விருத்தியடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம்...