உதவும் கரங்களின் உன்னதமான பணி; புத்தளம் சாஹிராவுக்கு பஸ் நன்கொடை!

Date:

புத்தளம் சாஹிரா தேசிய பாடசாலையானது இப்பகுதியில் உள்ள முக்கியமான ஆண்கள் பாடசாலையாகும்.

இப்பாடசாலையில் பல்வேறு வசதிகளும் வளங்களும் இருந்தாலும் கூட, மாணவர்களுக்குத் தேவையான பயணங்களை மேற்கொள்வதற்கான பிரத்தியேக பஸ் வண்டி இல்லாத ஒரு குறை நீண்ட காலமாக நிலவி வந்தது.

மாணவர்கள் கொழும்பு போன்ற முக்கியமான இடங்களிலே நடக்கின்ற போட்டி நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்குச் செல்கின்ற பொழுது, அவர்களைக் குழுவாக அழைத்துச் செல்வதிலே பெரிய சிரமங்களை பாடசாலை நிர்வாகம் நீண்ட காலம் எதிர்நோக்கி வந்தது.

இதனை உணர்ந்த பாடசாலையின் பழைய மாணவர்கள், அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக, சாஹிரா கல்லூரிக்கான தனியான பஸ் வண்டி ஒன்றை கொள்வனவு செய்யும் திட்டம் இப்பொழுது முழுமையாக நனவாகிய நிலையில், நாளை மாலை கொள்வனவு செய்யப்பட்டுள்ள இந்த பஸ் வண்டியைப் பாடசாலைக்கு உத்தியோகபூர்வமாக வழங்கும் நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

பொதுநலன்களில் எல்லோரும் இணைந்து செயல்படுவதன் மூலமாக, அது எந்த அளவுக்கு தூரம் வெற்றிகரமாக சாத்தியப்பட சாத்தியப்பட முடியும் என்பதற்கான மிகச் சிறந்த முன்மாதிரியான நிகழ்வாக இந்த நிகழ்வைக் குறிப்பிட முடியும்.

இந்நிகழ்வு நாளை [16] வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணிக்கு சாஹிரா கல்லூரி வளாகத்தில் பாடசாலை அதிபர் நஜீம் தலைமையில் இடம்பெற இருக்கிறது.

மகத்தான இப்பணியை சாதித்த அனைவருக்கும் அல்லாஹ்வுடைய அருள் கிடைக்கவும் பாடசாலை இன்னும் பல மைல்கல்லை அடையவும் நாமும் பிரார்த்திப்போம்.

பாடசாலை முன்னேற்றத்திற்காக அனைவரும் மேற்கொண்ட இந்த நல்ல முயற்சிக்கு எமது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

ஜனாதிபதி செயலகத்தை நோக்கி தேரர்களின் நடைபேரணி !

சிறை தண்டனை அனுபவித்து வரும் கலகொட அத்தே ஞானசார தேரரை பொதுமன்னிப்பின்...

நோர்வுட் அஸ்வெசும மோசடி: 14 ஊழியர்கள் ஒப்புதல்!

நோர்வுட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும நிதியை மோசடியாகப் பெற்றுக்கொண்டதாகத் தாமாக முன்வந்து...

கடற்படையில் யோஷித ராஜபக்ஷ பெற்ற சம்பள விபரம்: கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சாட்சியம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷ, இலங்கை கடற்படையில்...