உலகின் அதிநவீன மற்றும் லட்சியப் போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘ரியாத் மெட்ரோ’ (Riyadh Metro) திட்டத்தின் வடிவமைப்பு மற்றும் நிர்மாணப் பணிகளில் அமெரிக்க நிறுவனங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன.
பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் அமெரிக்காவின் நிபுணத்துவம் மூலம் உருபெற்ற இப்போக்குவரத்து அமைப்பு, தற்போது ‘டைம் அவுட்’ (Time Out) நிறுவனத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான உலகின் சிறந்த பொதுப் போக்குவரத்து நகரங்கள் பட்டியலில் 16 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதன் மூலம் அரபு நாடுகளின் பட்டியலில் ரியாத் முதலிடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகப்பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றான ரியாத் மெட்ரோ திட்டமானது, அமெரிக்க மற்றும் சவூதி நாடுகளுக்கு இடையிலான வெற்றிகரமான கூட்டுறவை வெளிப்படுத்தும் ஒரு சான்றாகத் திகழ்கிறது.
திட்டமிடல் முதல் வடிவமைப்பு வரையிலான பல்வேறு கட்டங்களில் அமெரிக்க பொறியியல் வல்லுநர்களின் பங்களிப்பு இம்மாபெரும் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறப் பெருமளவில் உதவியுள்ளது.
சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் பொதுப் போக்குவரத்து சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு குறுகிய காலத்திற்குள் இந்த உலகளாவிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அதிநவீன வசதிகளுடன் கூடிய இந்த மெட்ரோ வலையமைப்பு, நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதோடு பொதுமக்களின் பயணத்தை மிகவும் எளிமையாக்கியுள்ளது.
