இதன் மூலம் சர்வதேச நிதிச் சந்தையில் இத்துறையின் போட்டித்தன்மையை அதிகரிப்பதுடன், நாட்டின் ஒட்டுமொத்த வங்கிச் சந்தையில் இஸ்லாமிய வங்கியியலின் பங்கினையும் கணிசமாக உயர்த்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துருக்கியில் வேகமாக வளரும் இஸ்லாமிய வங்கியியல்
துருக்கியில் பங்குபற்றல் வங்கியியல் துறை (இஸ்லாமிய வங்கியியல்) தொடர்ந்து விரைவான வளர்ச்சியைக் கண்டு வருகிறது.
-
ஆகஸ்ட் 2026 நிலவரப்படி, இத்துறையின் மொத்த சொத்துக்கள் 5.35 டிரில்லியன் துருக்கிய லிராவை எட்டியுள்ளன.
-
2025 ஆம் ஆண்டின் இறுதியில் நாட்டின் ஒட்டுமொத்த வங்கிச் சொத்துக்களில் 8.6% ஆக இருந்த பங்குபற்றல் வங்கிகளின் பங்களிப்பு, 2026 ஆகஸ்ட் மாதத்தில் 9.6% ஆக உயர்ந்துள்ளது.
உள்நாட்டு நிதிச் சந்தையில் இஸ்லாமிய வங்கியியலின் நிலையை மேலும் வலுப்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த பிரம்மாண்ட ஒருங்கிணைப்பு நடவடிக்கை துருக்கியின் அரசிற்குச் சொந்தமான இஸ்லாமிய நிதித்துறையில் புதிய மாற்றத்தையும் மறுசீரமைப்பையும் ஏற்படுத்தும் எனப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
